கொழும்பில் இளைஞனுக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி! பொலிஸாரின் செயற்பாடு

Report Print Vethu Vethu in சமூகம்

தலைநகர் கொழும்பில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு போதிராஜ மாவத்தைக்கு அருகில் பொலிஸார் இன்று முன்னெடுத்த விசேட நடவடிக்கையினால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்ணொருவரின் பணப்பையை திருடியதாக இளைஞர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை தாக்க முயன்றுள்ளனர்.

எனினும் உடனடியாக தலையிட்ட பொலிஸார், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அதுவொரு நாடகம் என தெளிவுபடுத்தினர்.

மக்கள் மத்தியில் திருட்டுச் சம்பவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பான காணொளியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.