வவுனியா குட்செட் வீதியால் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்! வெளியான பயங்கர காட்சிகள்..

Report Print Theesan in சமூகம்

வவுனியா குட்செட் வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அச்சத்துடனையே பயணிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக அக்கிராம இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா குட்செட் வீதியில் பாரிய இரண்டு வளைவுகளை கொண்ட வீதியின் அருகே உள்ள வீடுகளில் நிற்கும் உயர வளர்ந்த தென்னை மரங்கள் வீதியை நோக்கி உயரவளர்ந்து காணப்படுவதினால் அவ்வீதியில் பயணிப்பவர்கள் அச்சத்தின் மத்தியில் பயணிக்க வேண்டியுள்ளது.

மேலும் குறித்த தென்னை மரங்களில் தேங்காய்கள் மற்றும் பழுத்த தென்னை ஓலைகளும் காணப்படுவதால் பலத்த காற்று வீசும் இக்காலகட்டத்தில் பயணிப்பவர்கள் மீது குறித்த தேங்காய்கள் வீழ்வதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது.

குறித்த வீதியானது சிறுவர்கள், முதியவர்கள் என எந்நேரமும் மக்கள் போக்குவரத்து அதிகமாக நிறைந்த வீதியாகும் இதில் இவ்வாறு அசாதாரண சூழ்நிலை காணப்படுவதற்கு நகரசபை நடவடிக்கை எடுக்கும் என கிராம இளைஞர்கள் தெரிவிப்பதுடன், நகரபிதாவிடமும் இதுபற்றி தேறி தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த சில தினங்களிற்கு முன் கடுகண்ணாவ பகுதியில் தென்னை மட்டை பெண்ணொருவரின் மேல் வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.