மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி 12வது நாளாகவும் தொடர்ந்தது

Report Print Ashik in சமூகம்

மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று 12 ஆவது நாளாகவும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலதிகமாக சில முக்கியஸ்தர்களும் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 12 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்ற மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியில் களனி பல்கலைக்கழக 'தொல்பொருள்' அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும், பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்ததுவ வைத்திய அதிகாரி ஒருவரும் அகழ்வு நடவடிக்கையில் இணைந்துள்ளனர்.

மேலும், ஆராய்சிகளை விசேட சட்டவைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினரும் , களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்ற போதும் இன்றைய நாளில் களனி பல்கலைக்கழக தொல்பொருள் அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும், பயிற்சி நிலை 4 வைத்திய அதிகாரிகளும் பல் நிபுணத்ததுவ வைத்திய அதிகாரி ஒருவரும் இரண்டாவது நாளாக இணைந்து கொண்டு அகழ்வு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

கடந்த 6 ஆம் திககி இடம் பெற்ற அகழ்வு பணிகளில் மனித வளம் குறைவாக காணப்பட்டதை தொடர்து அகழ்வு பணிக்காக யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.