சாரதிக்கு மயக்க தன்மை ஏற்பட்டதால் நேர்ந்த விபரீதம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

லிந்துலை பெயார்வெல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன், முச்சக்கரவண்டி மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த கணவன், மனைவி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கணவனும், மனைவியும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், முச்சக்கரவண்டி சாரதி மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க தன்மை ஏற்பட்டதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.