இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு இறுதி யுத்தத்தில் நடந்ததை கண்முன் கொண்டு வந்த படத்துக்கு தடை

Report Print Nivetha in சமூகம்

யுத்த காலத்தில் ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளையும், அவலங்களையும் அடிப்படையாக கொண்டு உருவான “சாட்சிகள் சொர்க்கத்தில்” என்ற திரைப்படத்துக்கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளது.

இந்தப் படத்தில், கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்ரியாவுக்கு நேர்ந்த கொடூரத்தை காட்சிப்படுத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் படமாக்கப்பட்ட குறித்த திரைப்படம் ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் தொழில்நுட்ப பணிகளை அங்கு உள்ள தமிழர்களே மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் துணைக் கதைகள், குறும்படங்களாக பல பன்னாட்டு விருதுகளை தட்டிச் சென்றிருந்தன.

யுத்தம் இடம்பெற்று பல வருடங்கள் கடந்து விட்டது. எனினும், யுத்தம் தந்த காயங்களும் , தமிழர்களுக்கு நடந்த கொடூரங்களும் தமிழர்களை விட்டு நீங்காது என்பது மறுக்க முடியாத உண்மை.