யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்களால் பரபரப்பு! பின்னர் வெளியான தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ். குடாநாட்டில் இருவேறு பகுதிகளில் இரு சடலங்கள் மீட்கப்பட்டமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் மூன்று நாள்களுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம் எனவும், அவை உருங்குலைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் இதுவரை அடையாளங்காணபடவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி:

காணாமல்போன இரு மீனவர்கள் புங்குடுதீவு கடற்கரையில் சடலமாக மீட்பு