படையினரின் வாகனம் மோதி முச்சக்கரவண்டி விபத்து

Report Print Theesan in சமூகம்

வவுனியா மணிக்கூட்டு சந்திக்கு அருகே முச்சக்கர வண்டியின் மீது படையினரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம், இன்று மதியம் 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரிலிருந்து வந்த முச்சக்கரவண்டி, மணிக்கூட்டு கோபுரம் ஊடாக குடியிருப்பு பூங்கா வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் வவுனியா வைத்தியசாலை வீதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த படையினரின் வாகனம் மோதி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.