பிரபல பாதாள உலகக்குழு தலைவரின் மூன்று சகாக்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் என்ற மதுஷ் லக்சித என்பவரின் மூன்று சகாக்கள் கடுகன்னாவ பிரதேசத்தில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலகக்குழு தலைவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகந்துரே மதுஷ் வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்து வருகிறார். அங்கிருந்து இலங்கையில் தனது சகாக்களை கொண்டு பாதாள உலக செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.