உடுத்துறையில் சிறப்பாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்! அனந்தி சசிதரன் பங்கேற்பு

Report Print Vethu Vethu in சமூகம்

உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுப் போட்டி இன்று சிறப்பாக நடைபெற்றன.

கழகத்தின் தலைவர் அ.அருட்சந்திரன் தலைமையில் பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் போட்டிகள் இன்று மாலை நடைபெற்றன.

நிகழ்வில் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கௌரவ விருத்தினராக கலந்து கொண்டார். மற்றும் பல துறைசார் அதிகாரிகள் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றனர்.

இன்றைய போட்டியில் கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

விழாவின் முடிவில் வீரர்களுக்கு பரசில்கள் வழங்கப்பட்டதுடன், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவமும் வழங்கப்பட்டது.