காதர் மஸ்தானுக்கு எதிர்ப்பு! நல்லூர் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டம்

Report Print Sumi in சமூகம்

இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். நல்லூர் முருகன் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்து மகா சபையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் சிவசேனா அமைப்பின் தலைவர், இந்து மகா சபையின் உறுப்பினர்கள், பொது மக்கள் என பவரும் கலந்துகொண்டனர்.

“இந்து விவகார பிரதி அமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமித்தமையானது, இந்துக்களை ஒடுக்கும் செயல் எனவும், எனவே, வேறு ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்குமாறும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது”

இந்நிலையில், இந்து விவகார அமைச்சர் பதவியிலிருந்து காதர் மஸ்தான் நாளை பதவி விலகவுள்ளதாக தகவலரிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, புதிய இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேரும், பிரதியமைச்சர்கள் ஆறு பேரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்போது காதர் மஸ்தான், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.