ஜனாதிபதியால் முடிந்தால் பௌத்த விவகாரத்திற்கான அமைச்சினை வேறு ஒரு மதத்திற்கு வழங்கி பார்க்க வேண்டும்!

Report Print Kumar in சமூகம்

இந்து மத விவகார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை இந்துமக்களின் ஒற்றுமை என்ற அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பிரதியமைச்சர் நியமனத்திற்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் உடனடியாக இந்து மத விவகாரத்திற்காக இந்து மதத்தினை சார்ந்த ஒருவரை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி நல்லிணக்கத்தினை காட்ட விரும்பினால் பௌத்த விவகாரத்திற்கான அமைச்சினை வேறு ஒரு மதத்திற்கு வழங்கி பார்க்க வேண்டும் என்றும் இரண்டு மதங்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது என்றும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் வலியுறுத்தப்பட்டது.