யாழில் பூ மழை பொழிந்த ஹெலிக்கொப்டர்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று இடம்பெற்ற நிலையில், வானில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலம் மலர் தூவப்பட்டுள்ளது.

பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் உற்சவத்தினை முன்னிட்டு இன்று திருச்சொரூபம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதன்போது வானில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலம் மலர் தூவப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.