மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உப குழு மீளமைப்பு

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் சார்ந்த சவால்களை தொடர்ச்சியாகக் கையாள்வதற்கு ஏற்ற வகையில் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உப குழு மீளமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ் இதனை தெரிவித்தார்.

சிறுவர் நலன்சார்ந்த செயற்பாட்டாளர்களை இணைத்து தொடர்ச்சியாக இயங்கச் செய்யும் நோக்கில் செயற்பாட்டு அரங்கத்தை மீளமைக்கும் கூட்டம் நேற்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கட்டிடத் தொகுதியிலுள்ள மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உப குழு அலுவலகத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறுவர் நலன்சார் துறைசார்ந்தோர் பங்கு பற்றியயிருந்தனர்.

இதன்போது சிறுவர்களின் விவகாரங்களைக் கிரமமான முறையில் தொடர்ச்சியாகக் கையாள்வதற்கு ஏற்ற வகையில் சிறுவர் சவால்களுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடன் பெறுவதனால் உண்டாகும் பின் விளைவுகளால் குடும்பத்திலுள்ள சிறுவர்களும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள் என்பதும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், எந்த வழியிலாவது நுண்கடன் விடயத்திற்கு ஒரு பொறிமுறை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஏகோபித்த கருத்தில் பிரஸ்தாபித்திருந்தனர்.