இஸ்லாமியர் ஒருவரை இந்து மத விவகார பிரதி அமைச்சராக ஏன் நியமிக்க வேண்டும்?

Report Print Akkash in சமூகம்

இஸ்லாமியர் ஒருவரை இந்து மத விவகார பிரதி அமைச்சராக ஏன் நியமிக்க வேண்டும்? என அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் மாணிக்கம் தவயோகராஜா தெரிவித்துள்ளார்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேரும், பிரதியமைச்சர்கள் ஆறு பேரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்போது காதர் மஸ்தான், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் வெளியிட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் லங்காசிறி செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்து மத விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்களிடத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. ஒருவேளை இது தவறுதலாகவும் நடந்திருக்கலாம்.

இது ஒரு துக்ககரமான சம்பவம். நாங்கள் ஜனநாயக ரீதியில் பயணித்துகொண்டிருக்கும் நிலையில் இப்படியான பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வது நல்லது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன் கதைத்திருந்தேன். இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு, ஜனாதிபதியுடன் பேசி சுமூகமான முடிவெடுப்பதாக கூறியிருக்கின்றார்.” என தெரிவித்தார்.