திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த அரசாங்க அதிகாரிகள்

Report Print Dias Dias in சமூகம்

திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அரசாங்க அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நாங்கள் உங்களுக்கு உதவ வேண்டுமாக இருந்தால் உங்களுடைய கருத்து எமக்கு தேவை. உங்களிடம் இருக்கும் தகவல்களை எம்மிடம் கூற முடியும் என அரசாங்க அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சந்திப்பில் திருகோணமலையில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும், அரச முக்கியஸ்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.