21 வயது யுவதி மர்மமான முறையில் மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

காலியல் மர்மமான முறையில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்பிட்டிய, ஊரகஹ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை பணி நிறைவடைந்து வீட்டிற்கு வராத யுவதியை, பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர். எனினும் குறித்த யுவதி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

வேன் ஒன்றில் வந்த இளைஞனே இந்த யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகளினால் வாகனத்தின் இலக்கம் பதிவு செய்து கொள்ளப்பட்டுள்ளது.

யுவதி உயிரிழந்தமை தெரியவந்ததுடன், குறித்த இளைஞர் வேனில் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபருக்கும் உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் நீண்ட காலங்களாக காதல் தொடர்பு ஒன்று காணப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் திருமணமானவர் என தெரிந்த பின்னர் பெண் காதல் தொடர்பை கைவிட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எப்படியிருப்பினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்காத நிலையில் பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்றுள்ளது.