வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

Report Print Theesan in சமூகம்

வவுனியா> மகாறம்பைக்குளம் பகுதியில் இன்று (14.06) அதிகாலை 5.30 மணியளவில்தூக்கில் தொங்கிய நிலையில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாகமீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா மகாறம்பைக்குளம் 1ம் ஒழுங்கையில் வசித்து வரும் விஜிபாலன்என்பவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே நேற்றிரவு சிறு கருத்துமுரண்பாடொன்று ஏற்பட்டுள்ளது.

இதன் போது மனவேதனையடைந்த விஜிபாலன் (வயது-46) வீட்டிலிருந்து 5 மீற்றர்தொலைவில் காணப்படும் மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இன்று அதிகாலை 5.30மணியளவில் இவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே சென்றசமயத்தில் குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவஇடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் இரு பெண் பிள்ளை , இரு ஆண்பிள்ளைகளின் தந்தையாவர்.