விக்கிலீக்ஸ் நிறுவுனருக்கு ஆதரவாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் போராட்டம்

Report Print Ajith Ajith in சமூகம்

அமெரிக்காவின் பல இராஜதந்திர இணையத்தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அஸான்ஜியை விடுவிக்கக்கோரி இலங்கை உட்பட சில சர்வதேச நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஜூலியன் அஸான்ஜி கடந்த 6 வருடங்களாக லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில், விக்கிலீக்ஸின் ஆதரவாளர்கள் அவரை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக ஸ்கூப் என்ற இணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் எதிர்வரும் 19ஆம் திகதியன்று அமெரிக்க தூதரகம் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரம் ஆகியவற்றின் முன்பாக நடத்தப்படவுள்ளது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, பிரித்தானியா, நியூஸிலாந்து, இந்தியா, ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தூதரக மற்றும் உயர்ஸ்தானிகரக அலுவலகங்களுக்கு முன்பாகவும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.