தேரரை கொலை செய்ய உத்தரவிட்ட கோத்தபாய? கொழும்பு ஊடகம் அதிர்ச்சித் தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் தேவைக்கு அமைய தேரர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கோத்தபாயவின் தேவைக்கு அமைய இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுவதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கதிர்காமத்தில் கோத்தபாய ராஜபக்சவுக்கு சொந்தமானதென கூறப்படும் வீட்டின் நிர்மாணிப்பு தொடர்பில் தம்மிந்த தேர் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த காரணத்தை அடிப்படையாக கொண்டு இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் இந்த கொலையின் பிரதான சந்தேகநபர் விகாரையின் முன்னாள் பூசாரி என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர நேற்றிரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.