நுன் நிதி கடனால் பாதிக்கப்படும் சமூகங்களை பாதுகாக்க முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணி

Report Print Mohan Mohan in சமூகம்

நுன் நிதி கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் சமூகங்களை பாதுகாக்கும் நோக்கில் முல்லைத்தீவு நகர்பகுதியில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நுன் கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கத்திற்கும் மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் முகமாக இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேரணி ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

குறித்த பேரணியில் பல நூற்றுக்காணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த சில ஆண்டுகளாக நுண் நிதி செயற்பாடுகளினால் நன்மைகளை அனுபவித்துவரும் எமது சமுதாயம் அதற்கு நிகரான சவால்களை சந்தித்து கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக பெண்கள் கடன் சுமைகளை தாங்கமுடியாது போகுமிடத்து தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்ளும் சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.