மோட்டார் சைக்கிள் திருடிய இருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றினை திருடிய இருவரை கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை வெருகல், ஈச்சிலம்பற்று, மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 22 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி மற்றொருவருக்கு விற்பனை செய்வதற்கு மறைத்து வைத்திருந்தஎநிலையில் பொலிஸாருக்கு சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்துள்ளதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.