கிளிநொச்சியில் கடனால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்கும் வகையில் கவனயீர்ப்பு பேரணி

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் நுன்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் சமூகத்தையும் பெண்களையும் பாதுகாக்கும் வகையிலும் கடன் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை விடுவிக்கும் வகையிலும் அரசாங்கத்திற்கும் மத்திய வங்கிக்கும் அழுத்தங்களைக் கொடுக்கம் வகையில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள், கிளிநொச்சி அரச மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனம் ஆகியன ஏற்பாடு செய்த இப்பேரணி இன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து ஆரம்பமாகி மாவட்டச் செயலகம் வரை சென்றடைந்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் நுன் நிதிச்செயற்பாடுகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும் தற்போது இது ஒரு பாரிய சவாலாக மாறியிருப்பதுடன், தற்கொலைகளும் அதிகரித்து காணப்படுகின்றன.

அதாவது வடமாகாணத்தில் இந்த நுன் நிதிக்கடன் செயற்பாடுகளினால் 59 இற்கும் மேற்பட்ட தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 20 வரையான தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன.

1. கடனை செலுத்துகின்ற காலத்தை இரண்டு வருடங்களுக்கு பிற்போட்டு அதற்கான வட்டியையும் ரத்துச்செய்து மீளச் செலுத்தும் வசதியினை ஏற்படுத்திக்கொடுத்து கடனை

மீளச்செலுத்துவதற்கான சரியான வருமான மூலத்தை பெற்றுக்கொள்வதற்கான வாழ்வாதார முயற்சிக்கான வசதியினை ஏற்படுத்திக்கொடுத்தல்.

2, கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச்செலுத்த முடியாமல் வட்டிக்கு வட்டி கொடுத்து எடுத்த கடன் தொகைக்கு மேலாக வட்டியை கட்டிக்கொண்டிருக்கும் மக்களின் கடன்களை ரத்துசெய்து இக்கடன்களை சுமையிலிருந்து விடுவித்தல்.

3, நுன்நிதிக்கடன் நிறுவனங்களின் அதிகூடிய வட்டிவீதத்தை குறைத்து பத்து வீதம் தொடக்கம் பதினைந்து வீதம் ஆண்டு வட்டிக்கு கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4, அரச வங்கிகள் ஊடாக குறைந்த வட்டி வீதத்திற்கு கடன்களை வழங்கும் திட்டங்களை போதியளவு மேற்கொள்வதற்கான நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்வதன் மூலம் மக்கள் தனியார் நிதி நிறுவனங்களின் பிடியில் இருந்து விடுபட்டு குறைந்த வட்டி வீதத்தில் வங்கிகளில் கடன்பெறும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

5. சமூக மட்டத்தில் இயங்கும் நுன்நிதி அமைப்புக்கள் ஊடாக நுன்நிதிச் செய்றபாடுகளுக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம் குறைந்த வட்டி வீதத்தில் கடன்களை பெறும் வசதியினை ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையினை முன்வைத்து குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.