விபத்தில் ஸ்தலத்திலேயே பலியான சாரதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதி இறக்கக்கண்டி பாலத்திற்கருகில் முற்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஹயாத்து முகம்மது மகீன் (38வயது) எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஏறாவூர் பகுதியிலிருந்து புல்மோட்டை பிரதேசத்திற்கு ஹயர் வந்த முற்சக்கர வண்டி சாரதியான இவர் இரவு அங்கு தங்கிவிட்டு இன்று காலை வீட்டுக்கு செல்லும் போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும், சடலம் தற்போது நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.