வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல் ஊற்று பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கித்துல் ஊற்று பகுதியில் உள்ள வீடொன்றினை நேற்று இரவு உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸாரும், பிரதேச வாசிகளும் கூறியுள்ளனர்.

இதனால், வீட்டிலுள்ள தளபாடங்கள் மற்றும் வீட்டு உபகரணப் பொருட்களும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இரண்டு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளான வீட்டு உரிமையாளர்களுக்கு அரசினால் எந்தவிதமான நஷ்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.