சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட தேக்கு மரக்குற்றிகள் மீட்பு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - தொப்பிகல நரக்கமுல்ல காட்டில் சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை உழவு இயந்திரத்துடன் புல்லுமலை வட்டார வன அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, உழவு இயந்திரத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து இந்த உழவு இயந்திரம் கூமாச்சோலைப் பகுதியைக் கடக்க முற்பட்டபோது வழிமறித்து சோதனையிடப்பட்டுள்ளது.

வன பாதுகாப்பு அதிகாரி எம்.ஏ. ஜாயா தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வன இலாகா அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.