குடி நீர் இணைப்பு நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

Report Print Rusath in சமூகம்

தாமரைக்கேணி கனகசூரியம் பூசகர் வீதிக்கு மனித வாழ்விற்கு மூலாதாரமாகக் காணப்படும் குடி நீரை குழாய் மூலம் பெறுவதற்கான நீர் இணைப்பு நிர்மாணப் பணிகள் புதன்கிழமை இடம்பெற்றதாக இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாநகர சபையின் 10 ஆம் வட்டார உறுப்பினர் சிவம் பாக்கியநாதனின் முயற்சியினால் தேசிய நீர் வளங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு அலுவலகப் பணியாளர்கள் மூலம் குறித்த வீதியை அண்டியுள்ள வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பு செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

ஓவ்வோரு குடியிருப்பாளரும் தலா ரூபாய் 8000 ஆயிரம் செலுத்துவதன் மூலம் குழாய் நீர் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இத்திட்டத்தினால் குறித்த வீதியில் உள்ள சுமார் 20 குடும்பங்கள நன்மையடையவுள்ளதாகவும் மாநகர சபை உறுப்பினர் பாக்கியநாதன் மேலும் தெரிவித்தார்.