பாடசாலை தோட்டத்தினை கையளித்தலும் மற்றும் விவசாய கண்காட்சியும்

Report Print Rusath in சமூகம்

விவசாய திணைக்களத்தின் தெற்கு வலய களுவாஞ்சிகுடி விவசாய போதனாசிரியர் பிரிவில் விவசாய திணைக்களத்தினால் மட்.பட்.பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் , களுவாஞ்சிகுடியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாடசாலை தோட்டத்தினை கையளித்தல் மற்றும் விவசாய கண்காட்சி என்பன பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு விவசாய பிரதி பணிப்பாளர் (விரிவாக்கம் ) எம்.பரமேஸ்வரன் பிரதம அதிதியாகவும் களுவாஞ்சிகுடி விவசாய போதனாசிரியர் என்.லட்சுமன், விவசாய திணைக்கள அதிகாரிகள் , பாடசாலை பிரதி அதிபர்கள் , விவசாய பாட ஆசிரியர்கள் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதி மற்றும் அதிதிகள் மாதிரி பாடசாலை தோட்டத்திற்கான பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்ததுடன் கண்காட்சி கூடம் மற்றும் பச்சை வீடு என்பனவற்றையும் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்களும் விவசாய திணைக்கள அதிகாரிகளும் ,மாணவர்களும், கல்விசாரா உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.