இந்து கலாச்சார பிரதி அமைச்சராக மஸ்தான் நியமிக்கப்பட்டதை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Report Print Akkash in சமூகம்

இந்து கலாச்சார பிரதி அமைச்சராக காதர் மஸ்தானை நியமித்தமை கண்டனத்திற்கும் உரிய விடயம் என தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இந்து கலாச்சார பிரதி அமைச்சர் பதவியை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி இந்து கலாச்சார அமைச்சரின் காரியாலயத்தில் கோரிக்கை மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோரிக்கை மனுவை கையளிக்கும் போது இந்து கலாச்சார அமைச்சர் அங்கு இல்லை எனவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.