யாழ்ப்பாணத்தில் 23 இளைஞர்கள் மீது தடுத்து வைத்து தீவிர விசாரணை

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் 23 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த 23 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளினால் குறித்த 23 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூர்மையான ஆயுதத்தினால் தாக்கியமை, காயமேற்படுத்தியமை மற்றும் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவிற்கமைய தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.