நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகும் சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர்

Report Print Steephen Steephen in சமூகம்

சட்டமா, ஒழுங்கு மற்றும் அரச நிர்வாக பிரதியமைச்சர் நளின் பண்டார வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாளைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகவுள்ளார்.

நளின் பண்டார இன்றைய தினம் சட்டம், ஒழுங்கு மற்றும் அரச நிர்வாக பிரதியமைச்சராக தனது கடமைகளை பொறுபேற்றுக்கொண்டார். இந்த நிலையில், நாளைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராக உள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் தான் செய்திருந்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை பெற தன்னை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைத்துள்ளதாக நளின் பண்டார தெரிவித்துள்ளார்.