ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் சந்திப்பு!

Report Print Dias Dias in சமூகம்

இலங்கை அரசு உலகளாவிய ரீதியில் எடுத்த முன்னெடுப்புகள் காரணமாக தன் மீது இருந்த அழுத்தங்களைக் குறைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாது எதிர்வரும் 2019 மார்ச்சில் முடிவுக்கு வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்குப்பின் முற்றுமுழுதாக சர்வதேசத்தின் கடப்பாடுகளிலிருந்து வெளியேற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.

நாடுகளை மையப்படுத்தி இலங்கை அரசு எடுக்கும் நகர்வுகளை உன்னிப்பாக அவதானித்து எதிர்வினை ஆற்றவும் சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து இலங்கையை தப்பிவிடாமல் இருக்கும் செயல்திட்டங்களை ஏனைய புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் பிரித்தானிய தமிழர் பேரவை ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திரிகளுடனான முக்கியமான சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் முன்னாள் வர்த்தக அமைச்சரும் கிங்ஸ்டன் பாராளுமன்ற உறுப்பினருமான சேர் எட்டேவியும் (Rt Hon Ed Devy MP) இப்பேசசுவார்த்தைகளில் கலந்துகொண்டனர்.

ஐரோப்பாவிற்கான பிரான்ஸ் நாட்டின் இராஜதந்திரிகள் கரோல் (Carole), பிரான்சுவா (Francois) உடன் ஒருசந்திப்பும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மாஜா (Maja), கமில (Camille) ஆகிய இராஜதந்திரிகளுடன் இன்னொரு சந்திப்பும் மேற்கொள்ளப்பட்டன.

இன்று நடந்தசந்திப்புகளின் போது 2017ல் ஐரோப்பிய ஒன்றியம் மீளவழங்கிய GSP + தொடர்பாகவும் மனித உரிமைகள் பற்றிய விடயங்கள் தொடர்பாகவும் பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு முடிவுகளை மீளாய்வுசெய்யுமாறு கோரப்பட்டுள்ளது.