பெண்களையும் பாதுகாக்கும் வகையில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி

Report Print Yathu in சமூகம்

நுண்நிதிக்கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் சமூகத்தையும் , பெண்களையும் பாதுகாக்கும் வகையிலும் அரசாங்கத்திற்கும், மத்திய வங்கிக்கும் அழுத்தங்களைக் கொடுக்கம் கவனயீர்ப்புப் பேரணி கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேரணி இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இருந்து ஆரம்பமாகி மாவட்டச் செயலகம் வரை சென்றடைந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அரச, சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனம் ஆகியன பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் நுண்நிதிச்செயற்பாடுகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும், தற்போது இது ஒரு பாரிய சவாலாக மாறியிருக்கின்றதுடன், தற்கொலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

மேலும், வடமாகாணத்தில் இந்த நுண்நிதிக்கடன் செயற்பாடுகளினால் 59இற்கும் மேற்பட்ட தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 20 வரையான தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றதாக பேரணியில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்னர்.