கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முக்கிய அறிவிப்பு

Report Print Akkash in சமூகம்

புனித பிறை தென்படவில்லை. ஆகையினால் ரமழான் தினம் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிறைக்குழு அதிகாரிகள் மற்றும் இஸ்லாம் மத பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

இதன்படி, ஷவ்வால் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.