7 தமிழர்களுக்கு விழுந்த பேரிடி! முக்கிய குற்றவாளி இத்தாலியில் ஆபத்தான நிலையில்?

Report Print Shalini in சமூகம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலை மனு இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை பா.ஜ.க தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார்.

இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசு சட்ட சபையில் நிறைவேற்றியது சட்ட விரோத தீர்மானம். அதை ஜனாதிபதி நேரடியாகவே தள்ளுபடி செய்துவிட்டார். தூக்கில் இருந்து தப்பியுள்ள கொலையாளிகள் அதிஷ்டசாலிகள்.

இத்தாலியில், முக்கிய குற்றவாளி வசித்து வருகிறார். அவர் தீவிர உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.” என்று பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களுடைய, வாழ்வின் பெரும்பகுதி சிறையில் கடந்த நிலையில், அவர்களைக் கருணை அடிப்படையில், விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது.

தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் தமிழக அரசின் மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த ராம்நாத் கோவிந்த் மாநில அரசின் கோரிக்கையோடு, மத்திய அரசு உடன்படவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.