வவுனியாவில் அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட அதி சொகுசு கார்

Report Print Theesan in சமூகம்

கண்டி வீதியில் சென்ற அதி சொகுசு கார் ஒன்றினை வவுனியாவில் அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து அதில் பயணித்த நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து நிலத்தடியில் புதையல் தோண்டும் ஸ்கானர் ஒன்றையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நால்வரையும், அதி சொசுகு காரையும் இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.