பூட்டான் பெண்களை ஈராக்கிற்கு கடத்த முயன்ற இலங்கையர்!

Report Print Ajith Ajith in சமூகம்

பூட்டான் நாட்டின் மூன்று பெண்களை இலங்கை ஊடாக ஈராக்கிற்கு கடத்த முயற்சித்தஇலங்கையர் குறித்து தகவல் வெளியாகியிருந்த போதும், அது தொடர்பில் இதுவரைஉறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தமக்கு கிடைக்கவில்லை என்று பூட்டான் அறிவித்துள்ளது.

பூட்டானின் மூன்று பெண்களை இலங்கை ஊடாக ஈராக்கிற்கு அழைத்து செல்வதாக கூறியஇலங்கையர் ஒருவரை மும்பாய் பொலிஸார் கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் அண்மையில்செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன், குறி;த்த இலங்கையர் பூட்டானிய பெண்களை பாலியல் வர்த்தக நோக்கிலேயேஈராக்கிற்கு அழைத்து செல்ல முயற்சித்ததாக முன்னதாக இந்திய அதிகாரிகள்தெரிவித்திருந்தனர்.

எனினும் இந்த செய்தி தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் இருந்து இதுவரை தமக்குஎவ்வித தகவல்களும் உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என்று பூட்டானின் வெளியுறவுஅமைச்சு தெரிவித்துள்ளது