பாலியல் தொழில் விடுதி முற்றுகை - 8 பெண்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கிய பாலியல் தொழில் விடுதி ஒன்றை இன்று முற்றுகையிட்ட பாணந்துறை வலான மோசடி தடுப்பு பிரிவினர் அங்கிருந்த 8 பெண்கள் உட்பட 9 பேரை கைதுசெய்துள்ளனர்.

வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தேடுதல் அனுமதியுடன் இலக்கம் 96 நீர்கொழும்பு வீதி கந்தானை என்ற முகவரியில் அமைந்துள்ள குறித்த இடத்தை பொலிஸார் முற்றுகையிட்டனர்.

வலான மோசடி தடுப்பு பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எச். பிரசாந்தவின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் நீதிமன்ற அனுமதியை பெற்றிருந்தனர்.

முற்றுகையின் போது அங்கிருந்த விடுதியின் முகாமையாளர் எனக் கூறப்படும் 26 வயதான இளைஞனையும் அங்கு தங்கியிருந்த 8 பெண்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள் கோட்டேகொட, சீதுவை, நுவரெலியா, கொழம்பகேஹார, கிம்புலாப்பிட்டிய ஆகிய பகுதியை சேர்ந்த 32 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.