திடீரென தீப்பற்றிக் கொண்ட பழமையான ஆலமரம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - முள்ளிப்பொத்தானை 96ஆம் கட்டையில் வீதியோரத்தில் இருந்த பழமை வாய்ந்த பெரிய ஆலமரமொன்று திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தையடுத்து அப்பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்த தம்பலகமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அத்துடன் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இதனால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.