மாணவ தலைவர்களுக்கான சின்னம்சூட்டும் நிகழ்வு

Report Print Nesan Nesan in சமூகம்

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் உயர்தரத்தில் கற்கும் மாணவ தலைவர்களுக்கான சின்னம்சூட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, கல்லூரியின் சிசிலியா மேரி அரங்கில் முதல்வர் செபமாலை சந்தியாகு தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை நீதிவான் நீமன்ற நீதிபதியும், மாவட்ட மேலதிக நீதிபதியுமான ஐ.என்.றிஸ்வான் கலந்துகொண்டுள்ளார். இதன்போது, கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மாணவ தலைவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் நல்ல பண்புகளையும் தலைமைத்துவ ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எமது இலங்கை திருநாட்டில் எதிர்கால சமூகத்திற்கு தலைமை தாங்கக்கூடிய பொறுப்பினை ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றீர்கள்.

எதிர்கால தலைவர்களாக வரவேண்டிய நீங்கள் உங்களுக்கென்று சில அளவீடுகளையும் சிறந்த பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னால் உள்ள மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக செயற்படவேண்டியது கட்டாயமாகும் என்றும் கல்முனை நீதவான் நீமன்ற நீதிபதியும், மாவட்ட மேலதிக நீதிபதியுமான ஐ.என்.றிஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.