மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சிரமதான பணிகள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்று மாலை சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது வைத்தியசாலையின் குழந்தைகள் சிகிச்சை பிரிவின் அருகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதி அடர்ந்த புதர்களாலும், குப்பைகளாலும் நிறைந்து காணப்பட்டது. இந்த நிலையிலேயே அங்கு துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த பணிகளில் சாந்திபுரம், பெரியகமம், தரவன் கோட்டை, தோட்டக்காடு, எழுத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 100 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.