இலங்கை சென்ற விமானத்தில் உயிரிழந்த பெண்

Report Print Steephen Steephen in சமூகம்

பறக்கும் விமானத்தில் உயிரிழந்த பாகிஸ்தான் பெண்மணியின் மரணம் தொடர்பான விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்த இந்த பெண் விமானத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த 86 வயதான நிஷா அலிமுன் என்ற பெண்மணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேரத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.