வவுனியாவில் வைத்தியரின் அட்டகாசம்! பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்

Report Print Theesan in சமூகம்

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகிய வைத்தியரின் உறவினர்கள் முறைப்பாட்டினை மீளப்பெற 10 லட்சம் ரூபா வழங்க முற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் வைத்தியர் அங்கு பணி புரியும் பெண்ணை பாலியல் ரீதியான தொந்தரவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய குறித்த வைத்தியரை கைது செய்த பொலிஸார் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன்போது எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த வைத்தியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

10 லட்சம் ரூபாய் பணமும் பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும், பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை மீளப்பெறுமாறு பாலியல் குற்றாச்சாட்டுள்ளாகிய வைத்தியரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

குறித்த வைத்தியர் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அனுப்பிய குறுந்தகவல் வெளியாகியுள்ளன. குறுந்தகவலின் மேல்பகுதியில் உள்ள அவரது தொலைபேசி இலக்கம் நீக்கப்பட்டுள்ளது. இவ் குறுந்தகவல் சான்றுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி

வவுனியாவில் வைத்தியர் மீது பாலியல் முறைப்பாடு! கைது செய்ய நடவடிக்கை!