புலிக்கொடி, சீருடை மீட்கப்பட்ட விவகாரத்தில் தப்பியோடிய புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

முல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடைகள், கொடி மற்றும் குண்டுகள் என்பவற்றை எடுத்து சென்ற போது தப்பியோடிய விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மல்லாகம் வீதியின் வன்னிவிலாயன்குளம் பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் மாங்குளம் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

41 வயதான வெள்ளசாமி ஏகாம்பரன் என்ற புலிகளின் முன்னாள் உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கிளிநெச்சி சாந்திபுரம், அம்பாள் நகர் பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்த இவர் போரில் வலது கையை இழுந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக மாங்குளம் பொலிஸார் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கையளித்துள்ளனர்.

பொலிஸார் கைப்பற்றிய முச்சக்கரவண்டியில் இருந்து விடுதலைப் புலிகளின் மூன்று சீருடைகள், இரண்டு புலிக்கொடிகள், முகமூடி, 15 கிலோகிராம் எடை கொண்ட கிளைமோர் குண்டு, குண்டை வெடிக்க செய்ய பயன்படுத்தப்படும் இரண்டு ரிமோர்ட் கொண்ரோல்கள், தொடர்புச் சாதன கருவிகள், டெட்டநேட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.