சிறுத்தை புலியைக் கொன்ற இருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கிளிநொச்சி - அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தை புலியை கொன்ற சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களை கிளிநொச்சி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி அம்பாள்குளம் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை புலியை கொன்றவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய சிறுத்தை புலியை கொலை செய்யும் போது எடுக்கப்பட்ட காணொளி காட்சிகளை அடிப்படையாக கொண்டு பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

காணொளி காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் நான்கு சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளனர். இவர்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தை புலியை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை கிளநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.