லிந்துலையில் வான் விபத்து: இருவர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

லிந்துலை - தலவாக்கலை, டயகம பிரதான வீதியில் திஸ்பனை பகுதியில் இன்று அதிகாலை சிறிய ரக வான் ஒன்று வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் வானில் பயணம் செய்த சாரதியும், மற்றொருவரும் படுகாயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து டயகம பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் முதலில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.