குழந்தையைக் கொன்று தற்கொலைக்கு முயற்சித்த தந்தை

Report Print Steephen Steephen in சமூகம்

மூன்று வயதான தனது ஆண் குழந்தையைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மாரவில வடக்கு தொடுவாவ பிரதேசத்தில் இன்று மதியம் நடந்துள்ளது. ஆண் குழந்தையை கடலில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சித்த ஒருவரை பிரதேசவாசிகள் கண்டுள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட மீனவர் ஒருவர், இரண்டு பேரையும் காப்பாற்றியுள்ளார். ஆண் குழந்தை சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட ஏதேனும் பிரச்சினை இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.