வாள் வெட்டில் 24 வயது இளைஞன் கொலை

Report Print Steephen Steephen in சமூகம்

காலி ஹபராதுவ பொலிஸ் பிரிவில் கினிகல பிரதேசத்தில் இன்று மதியம் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞனை மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் வழிமறித்து தாக்கியுள்ளதுடன் வாள்களால் வெட்டியுள்ளனர்.

இதில் கடும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இளைஞன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹபராதுவ மீபே பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான லக்பிரிய அக்கலங்க பொக்குபிட்டிய என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பழைய முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.