சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம்பெறும் கிளிநொச்சியில் சிறுத்தைப் புலி கொலை

Report Print Ajith Ajith in சமூகம்

கிளிநொச்சியில் சிறுத்தைப் புலி ஒன்று பொதுமக்கள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச ரீதியாக இணையத்தளங்களில் முக்கிய செய்தியாக வெளியிடப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் கடந்த 21ஆம் திகதி பொதுமக்கள் சிலரால் சிறுத்தைப் புலி ஒன்று அடித்துக்கொல்லப்பட்டது. குறித்த சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த 10 பேர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சிறுத்தையை பொதுமக்கள் சிலர் இணைந்து அடித்துக் கொலை செய்தனர்.

அதுமட்டுமன்றி, கொல்லப்பட்ட சிறுத்தைப் புலியை வைத்துக்கொண்டு சிலர் செல்பி உள்ளிட்ட புகைப்படங்களை எடுத்துக்கொண்டதுடன், சத்தமிட்டுக்கொண்டு சிறுத்தைப் புலி கொல்லப்பட்டமைக்கு மகிழ்ச்சியும் வெளியிட்டிந்தனர்.

இந்தச் சம்பவத்தை சில பொதுமக்களும், விலங்கின ஆர்வலர்களும் கண்டித்துள்ளனர்.

இதன் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கைதுசெய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பல்வேறு சர்வதேச நாடுகளின் ஊடகங்களும் இந்தச் செய்தியை ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக வெளியிட்டு வருக

Washington Post, dailymail, Channel News Asia, Reuters, straitstimes.com உள்ளிட்ட பல்வேறு சர்வதேச ஊடகங்கள் இந்தச் செய்தியை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன.