பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நபர் - பொலிஸார் வெளியிட்ட காணொளி

Report Print Vethu Vethu in சமூகம்

காலி, ஹிக்கடுவ சந்தியில் வைத்து சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 30 வயதுடைய இனாசி சமிந்த என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வர்த்தக ரீதியான சைக்கிளில் போட்டியில் கலந்து கொள்ளும் ஓட்ட வீரர் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் தெற்கின் பிரபல பாதாள உலக குழு உறுப்பினரின் உதவியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர் 5 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.