வவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலளார் நாயகமான பத்மநாபாவின் 28வது சிரார்த்ததினமான தியாகிகள் தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் தோழர் சோமு அரங்கில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே. அருந்தவராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தற்போதைய தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பத்மநாபாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபமேற்றி வைத்தார்.

இதனையடுத்து வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம் .தியாகராசா, ஆர். இந்திரராசா, வவுனியாந கரசபை தலைவர் இ. கௌதமன், ஏனைய கட்சிப்பிரதிநிதிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான செ. மயூரன், துரைராசரட்ணம், சமூக ஆர்வலர் கண்ணகி தேவராசா உட்பட பலரும் கலந்துகொண்டு தீபமேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதன்போது ஈ. பி,ஆர்.எல்எவ் இன் வரலாற்றுக்குறிப்பேடு நூலும் வெளியிட்டு வைக்கப்படடிருந்தது.